2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்: எஸ்.எஸ்.சி அதிர்ச்சித் தோல்வி

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

23 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் தொடரில், நடப்பு சம்பியன்களான எஸ்.எஸ்.சி அணி, மொறட்டுவை விளையாட்டுக் கழக அணியால் தோற்கடிக்கப்பட்டது. 


இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மொறட்டுவை விளையாட்டுக் கழகம், திலான் நிமேஷின் 56, நிபுன கமகேவின் 40, மலிங்க டி சில்வாவின் 31, விதுஷ ஜெயசிங்கவின் 29 ஓட்டங்களின் துணையோடு, 249 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் அப்தாப் காடர் 4, சங்க ரமேஷ் 2, றமிந்து குமரசிங்க 2 என விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய எஸ்.எஸ்.சி, 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. றமேஷ் மென்டிஸ் 29, கவிந்து குலசேகர 27, சரித்த அசலங்க 27 என ஓட்டங்களைப் பெற, மடவ பெர்னான்டோ 3, விஹங்க கல்ஹர, திலான் நிமேஷ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மொறட்டுவை அணி சார்பாக அனுஷ்க பெரேரா 72, நிபுண கமகே 41, சசிந்து எதிரிவீர 33 ஓட்டங்களைப் பெற, அவ்வணி 221 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சங்க ரமேஷ் 5 விக்கெட்டுகளையும் கவிந்து குலசேகர 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

328 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய எஸ்.எஸ்.சி அணி சார்பாக றமேஷ் மென்டிஸ் 60, பிரவீன் பெர்னான்டோ 55 ஒட்டங்களைப் பெற்ற போதிலும், அவ்வணி 239 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் நிபுண கமகே 3 விக்கெட்டுகளையும் திலான் நிமேஷ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இடம்பெற்ற மற்றைய போட்டியொன்றில், கொழும்பு கிரிக்கெட் கழகத்தை எதிர்கொண்ட றாகம விளையாட்டுக் கழகம், 74 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .