Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 05 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார் அப்துல் சலாம் யாசீம்)
திருகோணமலை நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் இடையிலா கிரிக்கெட் போட்டி இன்று சனிக்கிழமை அங்குராப்பணம் செய்துவைக்கப்பட்டது.
நிலாவெளி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம் சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியால அணியை 4 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டு முதலாவது கிண்ணத்தை தமதாக்கி கொண்டது.
இருபது ஓவர்கள் கொண்டதான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சாமபல்தீவு தமிழ் மகா வித்தியாலய அணியினர் 15 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 59 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிலாவெளி தமிழ் மகா வித்தியால அணியினர் 6 ஓவர்கள் நிறைவில் 6 விககெட்டுகளையும் இழந்து 61 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றனர்.
இப்போட்டியில் சிறந்த பந்துவீச்சாளராக எஸ்.காந்தஷரூபன் (சாம்பல் திவு தமிழ் மகா வித்தியாலயம்), சிறந்த களத்தடுப்பாளராக எஸ்.வினியன் (சாம்பல் திவு தமிழ் மகா வித்தியாலயம்) மற்றும் சிறந்த துடுப்பாட்டக்காரராக பி.பகிரதன் (நிலாவெளி தமிழ் மகா வித்தியலயம்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago