2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

48வது வருடாந்த விளையாட்டு விழா

Super User   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 48வது வருடாந்த விளையாட்டு விழா  மிகவும் கோலாகலமாக  சனிக்கிழமை (19) களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய மைதானத்தில் இடம் பெற்றது.

களுவாஞ்சிகுடியில் முதற்தர கழகங்களில் ஒன்றான நியூ ஒலிம்பிக் கழகம் தனது 48வது ஆண்டில் கால்தடம் பதிக்கிறது.

களுவாஞ்சிகுடியில் முதன்மையும் பழைமையும் வாய்ந்த விளையாட்டுக் கழகமாக விளங்கும் நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 16ஆம் திகதி 04ஆம் மாதம் 1967ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் 47 வருடங்கள் கடந்துள்ள.

இவ் விளையாட்டுக் கழகம் நடாத்திய சித்திரைப் புதுவருட விளையாட்டு விழா சனிக்கிழமை (19) நடைபெற்றது.

இதன்போது தலையணைச்சமர், சாக்கோட்டம், சறுக்குமரம் ஏறுதல், முட்டி உடைத்தல், மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை), மா.நடராசா (நடா), இரா.துரைரெத்தினம், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X