Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 03, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 09 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி. ஷங்கீதன்
இளம் கதிர்கள் அமைப்பும், மலையக சிறகுகள் அமைப்பும் இணைந்து நுவரெலியாவில் நடாத்திய அணிக்கு ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்டத் தொடரில், எஸ்.ஓ.எஸ் கழகம் சம்பியனாகியது.
நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 18 அணிகள் பங்குபற்றிய இத்தொடரின் இறுதிப் போட்டியில் யங் பேர்ட்ஸ் அணியை வென்றே எஸ்.ஓ.எஸ் அணி சம்பியனாகியிருந்தது.
அண்மையில் நடைபெற்ற இவ்விறுதிப்போட்டியின் வழமையான நேரம் முடியும்வரை எந்தவொரு அணியும் கோல் பெறாமல் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் போட்டி முடிவுற்றது.
இதன்போது போட்டியின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதற்காக வழங்கப்பட்ட பெனால்டியில், 3-2 என்ற ரீதியில் வென்றே எஸ்.ஓ.எஸ் சம்பியனாகியிருந்தது.
எஸ்.ஓ.எஸ் சார்பில், சசிதரன், தினேஸ் குமார், தரிந்து ஆகியோர் தமது பெனால்டிகளை உட்செலுத்தியிருந்ததுடன், யங் பேர்ட்ஸ் சார்பில், சச்சின், சஞ்ஜே காந்த் ஆகியோர் தமது பெனால்டிகளை உட்செலுத்தியிருந்தனர்.
இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக, எஸ்.ஓ.எஸ் அணியைச் சேர்ந்த காளிமுத்து முரளீதரன், சிறந்த கோல் காப்பாளராக யங் பேர்ட்ஸ் அணியைச்சேர்ந்த எஸ். சச்சின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
சம்பியனான எஸ்.ஓ.எஸ் அணிக்கு 30,000 ரூபாய் பணமும், இரண்டாமிடத்தைப் பெற்ற யங் பேர்ட்ஸ் அணிக்கு 20,000 ரூபாய் பணமும் வெற்றிக் கிண்ணங்களும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இவ்வைபவத்தில் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ஜெயராம் வினோஜ், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் இராமஜெயம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) உப தலைவரும், முன்னாள் நுவரெலியா மாநகரபை பிரத முதல்வர் பி. சிவராஜா, இ.தொ.கா உதவிச் செயலாளர் பாரத் அருள்சாமி, நுவரெலியா கால்பந்தாட்ட லீக்கின் தலைவரும் முன்னாள் நுவரெலியா மாநகர சபை பிரதி நகர முதல்வர் எல். நேருஜி உட்பட பலர் கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
43 minute ago
1 hours ago