2020 ஜூன் 04, வியாழக்கிழமை

சம்பியனானது டெயா டெவில்ஸ்

எஸ்.கார்த்திகேசு   / 2019 மே 15 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை தம்பிலுவில் றேஞ்சரஸ் விளையாட்டுக் கழகம் ஒன்பதாவது தடவையாக நடாத்திய ஆர்.பி.எல் கிரிக்கெட் தொடரில் டெயா டெவில்ஸ் சம்பியனானது.

தம்பிலுவில் தேசிய பாடசாலை மைதானத்தில், இத்தொடரின் தலைவர் தம்பிராசா கண்ணன் தலைமையில் கடந்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பித்த இத்தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸை வென்றே டெயா டெவில்ஸ் சம்பியனானது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெயாடெவில்ஸ் 10 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 85 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 86 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெக்கான் சார்ஜர்ஸ் 8.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 68 ஓட்டங்களைப் பெற்று 17 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

சம்பியனான டெயா டெவில்ஸ் சம்பியனுக்கான வெற்றிக் கிண்ணத்தையும் 80,000 ரூபாய் பணப்பரிசைப் பெற்றதுடன், இரண்டாமிடத்தைப் பெற்ற டெக்கான் சார்ஜர்ஸ் இரண்டாமிடத்துக்கான வெற்றிக் கிண்ணத்தையும், 60,000 ரூபாய் பணப்பரிசையும் பெற்றது.

இறுதிப் போட்டியின் நாயகனாக குலேந்திரன்,தொடரின் நாயகனாக சங்கர் தெரிவாகினர்.

இந்த ஆர்.பி.எல் தொடரானது, திருக்கோவில் பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் அனைவரையும் எட்டு அணிகளாகப் பிரித்து அணிக்கு நைட் றைடர்ஸ், கிங் லெவிண், கிங்கோப்ரா, றோயல் சலஞ்சர்ஸ், சண்றைசர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சுப்பர் கிங்கஸ், டெயா டெவில்ஸ் ஆகிய அணிகளின் பிரதிநிதித்துவத்தோடு இடம்பெற்றிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X