2021 மார்ச் 08, திங்கட்கிழமை

பாடசாலை ரீதியில் மகாஜனா முதலிடம்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 19 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடமாகாண கல்வி, விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட பாடசாலையாக வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி பெற்றுள்ளது. பெருவிளையாட்டு, தடகள மைதான போட்டிகளின் அடிப்படையில் அவ்வணி மொத்தமாக 228 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

வடமாகாண பெரு விளையாட்டுப் போட்டிகள் ஏற்கனவே முடிவுற்ற நிலையில், மைதான மற்றும் தடகள போட்டிகள் கடந்த 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையில் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இறுதிநாள் பரிசளிப்பு விழாவில் அதிக புள்ளிகளைப் பெற்ற பாடசாலைகளுக்கும் வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டன. இதில் முதலிடத்தை தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து முறையே 10 இடங்களுக்குள் வந்த பாடசாலைகளாக, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி - 152, மன்னார் சென்.ஆன்ஸ் மத்திய மகா வித்தியாலயம் -127, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி - 126, அளவெட்டி அருணோதயக் கல்லூரி - 120, முல்லைத்தீவு பாரதி வித்தியாலயம் 119, சுண்டுக்குளி மகளிர் கல்லூரி 108, சென்.ஜோன்ஸ் கல்லூரி 82, ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் 80, பளை மத்திய கல்லூரி - 79 ஆகியன பெற்றுக்கொண்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .