2020 ஓகஸ்ட் 03, திங்கட்கிழமை

மான்செஸ்டர் சிட்டி 6-1 கோல்களால் வெற்றி

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், இத்தாலி சிரீ ஏ மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றன. இதில்

அஸ்டன் வில்லா எதிர் மான்செஸ்டர் சிட்டி

செர்கியோ அகுவேராவின் ஹட்ரிக் கோல் மூலம் அஸ்டன் வில்லா அணிக்கு எதிரான போட்டியில்   மான்செஸ்டர் சிட்டி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

ஆர்ஜன்டீனாவின் முன்கள வீரரான அகுவேராவின் 12 ஆவது ஹட்ரிக் கோல் இதுவென்பதோடு ப்ரீமியர் லீக்கில் அதிக கோல் பெற்ற வெளிநாட்டு வீரர் எனவும்

சாதனை படைத்தார். 177 கோல்களை பெற்றிருக்கும் அவர் பிரான்க் லம்பர்டின் சாதனையை சமன் செய்தார்.

ப்ரீமியர் லீக்கில் அதிக கோல் பெற்றவர்கள் வரிசையில் அலன் ஷீரர், வெயின் ரூனி மற்றும் அன்டி கோல் ஆகியோர் மாத்திரமே இவரை விடவும் முன்னிலையில் உள்ளனர்.

ரியாத் மஹ்ரஸ் இரட்டை கோல் மற்றும் அகுவேரா, காப்ரியல் ஜேசுஸின் கோல்கள் மூலம் நடப்புச் சம்பியன் மான்செஸ்டர் சிட்டி முதல் பாதி ஆட்டத்தில் 4-0 என முன்னிலை பெற்றது.

பெரிதும் வெற்றி உறுதியான நிலையில் இரண்டாவது பாதியை ஆரம்பித்த மான்செஸ்டர் சிட்டி சார்பில் அகுவேரா 57 மற்றும் 81 ஆவது நிமிடங்களில் மேலும்

இரண்டு கோல்களைப் பெற்றார். போட்டியின் மேலதிக நேரத்தில் கிடைத்த பெனால்டி மூலம் அஸ்டன் வில்லாவினால் ஒரு கோலை பெற முடிந்தது.

இந்த வெற்றியுடன் சிட்டி புள்ளிப்பட்டியலில் மீண்டும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

எனினும் அந்த அணி முதல் இடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் 14 புள்ளிகளால் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--