2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வென்றது புத்தளம் விம்பிள்டன் கழகம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்டு வரும் பிரிவு இரண்டு கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடரின்   முதலாவது சுற்றில் புத்தளம் விம்பிள்டன் கழகம் வென்றுள்ளது.

பொலநறுவை தேசிய விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொலநறுவை நியூ பேர்ட்ஸ் கால்பந்தாட்டக் கழகத்தையே 6-1 என்ற கோல் கணக்கில் தமது இந்த முதலாவது சுற்றுப் போட்டியில் விம்பிள்டன் வென்றிருந்தது.

இந்நிலையில், இத்தொடரின் தமது அடுத்த சுற்றுப் போட்டியில் கெக்கிராவை யுனைட்டெட் அணியை புத்தளத்தில் விம்பிள்டன் கழகம் எதிர்கொள்ளவுள்ளது.

விம்பிள்டன் கழகத்தை, அக்கழகத்தின் முகாமையாளர் சட்டத்தரணி ஏ.டபிள்யூ.எம் அஸ்ராக் வழி  நடாத்தி இருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X