Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 17 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்
புத்தளம் த்ரீ ஸ்டார்ஸ் அணிக்கும், தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணிக்குமிடையே இடம்பெற்ற போட்டியொன்றில், தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வரும் காகில்ஸ் பூட் சிட்டி எப்.ஏ. கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரின் போட்டி ஒன்றிலேயே நியூ பிரண்ட்ஸ் அணி இந்த வெற்றியை அடைந்துள்ளது.
இந்தப் போட்டி, புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. புத்தளம் த்ரீ ஸ்ட்ரார்ஸ் அணியானது புத்தளம் நகரின் மிகப் பழைமைவாய்ந்த அணியாகும். தில்லையடி வாழ் இளைஞர்களை உள்ளடக்கிய தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணி அண்மைக்காலமாக பல வெற்றிக்கிண்ணங்களை சுவீகரித்த அணியாகும்.
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ரபீக் த்ரீ ஸ்டார்ஸ் அணியினையும், புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் பொருளாளரும், பீபா மத்தியஸ்தருமான எம்.எஸ்.எம்.ஜிப்ரி தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணியினையும் வழி நடாத்திச் செல்கின்றனர்.
இடைவேளைக்கு முன்பாக இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களையே பெற்றிருந்தன. எனினும், இடைவேளைக்குப் பின்னர் தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணியின் சிறப்பான ஆட்டத்தினால் மேலும் இரண்டு கோல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதன் மூலம் அவ்வணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணிக்காக எம்.பர்மான் இரண்டு கோல்களையும், எம்.ஜஹீர், ஏ.எச்.எம். இம்தியாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றுக் கொடுத்தனர். த்ரீ ஸ்டார்ஸ் அணி சார்பாக பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஏ.எம்.சபீக் பெற்றுக் கொடுத்தார்.
போட்டிக்கு மத்தியஸ்தர்களாக, ஏ.எம். பஸ்ரின், எச்.எச்.ஹம்ருசைன், ஐ.எம். அலி ஆகியோர் கடமையாற்றினர்.
8 minute ago
11 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
16 minute ago