2020 நவம்பர் 28, சனிக்கிழமை

தேசிய இளைஞர் விளையாட்டு விழா பொலநறுவையில் 25ஆம் திகதி ஆரம்பம்

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

25ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா எதிர்வரும் 25ஆம்; திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை பொலநறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர்  சம்மேளனம் மற்றும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து இந்த விளையாட்டுப் போட்டியினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த போட்டிக்கு நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 3,000 வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். ஆண் மற்றும்  பெண்கள் கலந்துகொள்ளும் 64 போட்டி நிகழ்வுகள் இங்கு இடம்பெறவுள்ளன.

இந்த இளைஞர் விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனை நிலைநாட்டும் முதலாவது வீர மற்றும் வீராங்கனைக்கு கார் ஒன்று பரிசாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 25ஆம் திகதி 3.30 மணிக்கு  இடம்பெறும் ஆரம்ப வைபவத்திற்கு பிரதம அதிதியாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவும் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் இறுதி நாள் நிகழ்வு 28ஆம் திகதி 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் மொகான் லால் கிரேரு. அமைச்சின் செயலாளர் கே.ஏ திலகரத்தன,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இறுதி நாள் நிகழ்வன்று இரவு 8 மணிக்கு இசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.கடந்த வருடம் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் கம்பஹா மாவட்டம் சம்பியனாகவும் 2ஆம் இடத்தை இரத்தினபுரி மாவட்டமும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .