2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

யாழில் கிரிக்கெட் பயிற்சி முகாம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்டப் பாடசாலைகளின் 13 வயதுப் பிரிவினர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.45 மணியளவில் ஆரம்பமாகியது.

யாழ். மாவட்டப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் மற்றும் இலங்கை வங்கியின் ஆதரவுடன் கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் பிரிட்டன் குறுர்ப் மற்றும் தேசிய கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்களும் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி, யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் பயிற்றுவிப்பாளர்களும் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த வதிவிடப் பயிற்சி முகாமில் இன்று இரவு தீப்பாசறை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X