2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சித்திரை புத்தாண்டு பலன்கள் - 2014

Super User   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}கிரக சஞ்சாரங்களின் படி ஜய வருடத்தின் அனைத்து ராசிகளுக்கான புதுவருட ராசி பலன்கள்.

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9 பாதங்கள்.

பூமி காரகனான செவ்வாயை ஆட்சி வீடாக கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இவ்வருடம் ஐப்பசி  மாதம் 16ஆம் திகதி முதல் அஷ்டம சனி தொடங்குகின்றது. ஆனி மாதம் 28ஆம் திகதியில் உங்கள் ராசியை விட்டு ராகு பகவான், கேது பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார்கள். ஆனி மாதம் 5ஆம் திகதி ணிதல் குருபகவான் 3ஆம் இடத்தில் இருந்து 4ஆம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். எனவே செய்யும் பணியிலும் தொழிலும் கவனம் தேவை. உடல் நலம் பாதிப்படையும். ஆனால் ஆயுள் கண்டம் கிடையாது. இவ்வருடத்தில் அஷ்டம சனி ஆரம்பிப்பதாலும் இந்த ராசிக்கு குரு பார்வை வருடம் ணிழுவதும் சனீஸ்வரன் மேல் இருப்பதால் அதிகமாக கெட்ட பலன் இருந்த போதிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தொழிலில் விருத்தியும் முன்னேற்றணிம் உண்டாகும். மாணவர்கள் மிகவம் கஷ்டப்பட்டு படித்து நல்ல பெறுபேற்றை பெறுவார்கள். மிகவும் வேதனையை தந்த நோய் பாதிப்பு குறையும். ஆனால் ஆடி மாதத்தில் உடல்நிலையில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புண்டு. இவ்வருடத்தில் கொடுக்கல்- வாங்களை தவிர்க்கவும். இல்லையேல் அதிக பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலை உருவாகும். கூட்டு வியாபாரத்தை தவிர்க்கவும். நீண்டகால முதலீட்டினால் இலாபம் அதிகரிக்கும். வைகாசி மாதத்தில் தங்கம் சேரும். இதுபோன்ற பலன்களை  கொண்ட ஆண்டு இது.

பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு நெய்தீபணிம் சனீஸ்வரனுக்கு எள்தீபமும் ஏற்றி வணங்கி வரவும். ஆடி மாத முதல் செவ்வாய் அன்று பழனி முருகனையும் ஸ்ரீ போகர் ஜீவ சமாதிக்கு குங்கும அர்ச்சனை செய்து வணங்கி வர  துன்பம் விலகி நன்மை உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

களத்திரகாரகனான சுக்கிரனின் ஆதிகத்தில் பிறந்த இடப ராசி அன்பர்களே..!

இவ்வருடம் ஐப்பசி  மாதம் 16ஆம் திகதி நடக்கும் சனிபெயர்ச்சியும் ஆனி மாதம் 28இல் நடக்கும் ராகு பகவான், கேது பகவான் இடப்பெயர்ச்சியாலும் மிகவும் நல்ல பலன்களே உள்ளன. ஆனி மாதம் 5ஆம் திகதி ணிதல் குருபகவான் 2ஆம் இடத்தில் இருந்து 3ஆம் இடத்திற்கு பெயர்ச்சி அடைவதால் சுப காரியங்களை வைகாசிக்குள் செய்து முடிப்பது நன்மையை தரும். ஏனெனில் வைகாசிக்குப் பிறகு நீங்கள் அநேக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட கூடும். ஐப்பசி மாதம் உங்கள் வாழ்க்கைத் துணையின் சரீரத்தில் சிறு சிறு நோய்ப் பாதிப்பு  ஏற்பட்டு நீங்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. அத்தோடு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும் எனவே ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மையை தரும். தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் விருத்தி அடையும். சித்திரை, வைகாசி, மாசி, பங்குனி மாதங்களில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அதிகரிக்கும் இடையிடையே உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செயலால் செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்களில் இவ்வருடம் பெரிய நன்மை இராது. எனவே கவனம் தேவை. இவ்வாறான பலன்களைக் கொண்ட ஆண்டு இது.

பரிகாரம்: ஐப்பசி மாதத்தில் வரும் ஏதாவது ஒரு வியாழக்கிழமை அன்று  கதிர்காமம் சென்று பிரார்த்தனை செய்துவருவதுடன் அடிக்கடி சிறு குழந்தைகளுக்கு இனிப்பு தானமாக கொடுத்து வர தடைகள் நீங்கி நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கல்விக்கு அதிபதியான புதனை ஆட்சி வீடாக கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!

இதுவரை காலம் நீங்கள் எதிர்நோக்கிய துன்பம் குறையும். நீங்கள் செய்த புண்ணியத்திற்கும் தானதர்மத்திற்கும் கடவுள் வழிபாடுகளுக்கும் நல்ல பிரதி பலன்களை தரக்கூடிய வருடம் இது. செய்யும் தொழில் அல்லது வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தனம் தானிய விருத்தி உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு ஆனி மாதம் வேலை வாய்ப்பு கிட்டும். இவ்வளவு காலம் தொல்லை கொடுத்து வந்த நோய் நீங்கும். உங்களுக்கு வீடு, மனை கட்டுவதற்கு ஏற்ற காலமாக இருப்பதால் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய தொழில் முயற்ச்சியில் ஈடுபடலாம். பழைய கடன் வசூல் ஆகும். வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு. குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டும். இவ்வருடத்தில் ஆனி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி ஆகியவை மிகவும் அதிர்ஷ்டத்தை  தரக்கூடிய மாதங்கள் ஆகும். கார்த்திகை, மார்கழி மாதத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்து நீங்கும். மொத்தத்தில் யோகம் நிறைந்த ஆண்டு இது.

பரிகாரம்: உங்களது  ஜென்ம நட்சத்திரத்தன்று ஜென்ம குருவுக்கும் குலதெய்வத்துக்கும் அபிஷேகம் செய்து தரிசனம் செய்து வர, வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றமும் செல்வணிம் இன்பமம் கிடைக்கும்.புனர்புசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மாத்ருகாரணாகிய சந்திரபகவானை ஆட்சி வீடாக கொண்ட கடக ராசி அன்பர்களே..!

கடந்த வருடத்தில் திடீர் விரையம், தொழிலில் நஷ்டம், வாழ்வில் முன்னேற்றம் இன்மை போன்ற பலன்களையே அனுபவித்திருப்பீர்கள். ஆனால் இவ்வருடத்தில் இவைகள் ஓரளவு மாறும். ஐப்பசி மாதத்திற்கு பிறகு பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மார்கழி, தை, மாசி மாதங்களில் உடல் ரீதியான துன்பமும் மனரீதியான குழப்பங்களும் ஏற்படும். எனவே இம்மாதங்களில் முக்கியமான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். காரணம் அவை நல்ல பலன்களை தராது. அத்தோடு கூட்டு வியாபார முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். மற்றும் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஈடுபடவேண்டாம். மாறாக பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. வீடு வாங்குவது, விற்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்களானால் பணம் கொடுக்கல் -வாங்களை உடனே செய்து முடித்தால் அது பூரணமாக முடிவடையும். இல்லையேல் பல சிக்கலை உருவாக்கும். உடனடி விரையம் நல்ல பலனைத் தரும். இவ்வாறான தடைகள் நிறைந்த வருடத்தில் நான்கு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று வீட்டில் கணபதி ஹோமம் செய்வதால் நன்மை உண்டாகும்.

பரிகாரம்: ஒவ்வொரு வியாழன் அன்றும் தக்ஷ்ணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து மனமுருக வேண்டி வர துன்பம் படிப்படியாக விலகி நன்மை உண்டாகும்.
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

ஆத்மகாரகனாகிய சூரிய பகவானை ஆட்சி வீடாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வருடத்தில் சித்திரை, வைகாசி மாதத்திற்குள் நீங்கள் சுபகாரியம் மற்றும் சுப செலவுகளை செய்துகொள்ள கூடிய காலமாகும். ஆனி மாதம் 5ஆம் திகதி நடைபெற உள்ள குரு பெயர்ச்சியும் ஆனி மாதம் 28ஆம் திகதி நடைபெற இருக்கும் ராகு - கேது பெயர்ச்சியும் ஐப்பசி மாதம் 16ஆம் திகதி நடைபெற இருக்கும் சனி பெயர்ச்சியும் உங்களுக்கு நல்ல பலன்களை தராது. ஆனி மாதம் முதல் எதிர்பாராத வீண் விரயங்களும் உடல் நல பாதிப்பும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடும் ஏற்படும். வீண் செலவுகளால் கடன் ஏற்படுவதை தவிர்க்க  சித்திரை, வைகாசி மாதத்துக்குள் நீங்களே உங்கள் சக்திக்கு  ஏற்றாற் போல் வீடு, காணி அல்லது தங்கம் வாங்குவது நல்ஷது. இவ்வருடம் சொத்துக்களை விற்காமல் சமாளிப்பது நல்லது. ஆனி மாதம் கடன் வாங்கினால்  கடனினால் தீமை அதிகரிக்கும். ஆனி மாதத்திற்கு பிறகு மனநிறைவான வாழ்க்கை அமையும். தேவைக்கேற்ப பணவரவு உண்டாகும். புதிய தொழில் முயற்ச்சி வெற்றி அடையும். பெற்றறோருக்கு நன்மை. இதுபோன்ற பலனை கொண்ட வருடம் இது.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுவதுடன் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்து வர தீமை விலகி நன்மை அதிகரிக்கும்.


உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

புத்திர காரணாகிய புதனை ஆட்சி வீடாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!

கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். இவ்வருடம் திருமண யோகம் நிறைந்த வருடமாக இருப்பதால் தடைபெற்ற திருமணம் சுமூகமாக நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். ராகு - கேது கிரகங்களின் மேல் குரு பகவானின் பார்வை  உள்ளதால் இக்காலத்தில் உங்கள் எண்ணம் போல் அனைத்தும் நன்மையாகவே நடைபெறும். மனக்குழப்பம் தீரும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு தொழில் முயற்ச்சி வெற்றி அடையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சித்திரை மாதத்தில் சில கஷ்டங்கள் ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவும். மனவேதனை அதிகரிக்கும். மற்றவர்களிடம் உதவியை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதற்கு பரிகாரமாக முன்னோர்களுக்கு படையலும் குலதெய்வ வழிபாடும் செய்வதால் பிரச்சினைகள் நீங்கும். மிகவும் நல்ல பலன்களை கொண்ட வருடம் இது.

பரிகாரம்: ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் லட்சுமி நரசிம்மருக்கு நெய்தீபம் இட்டு கற்கண்டு, துளசி மாலை சாற்றி பிரார்த்தனை செய்து வர தீமை விலகி நன்மை உண்டாகும்.சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.

களத்திரகாரனான சுக்கிரனை ஆட்சி வீடாக கொண்ட துலா ராசி அன்பர்களே..!

இந்தவருடம் ஆனி மாதம் 28ஆம் திகதி நிகழும் ராகு - கேது பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல பலன்களே உள்ளன. இக்காலத்தில் வாழ்வில் முன்னேற்றமும் வெற்றியும் கிட்டும். ஆனி மாதம் 5ஆம் திகதி நடைபெறும் குருபெயர்ச்சியால் தொழிலில் முன்னேற்றமும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையும் அமையும். ஐப்பசி மாதம் 16ஆம் திகதி நடக்கவிருக்கும் சனி பெயர்ச்சியால் ஏழரை சனியின் கடைசி 2 ஆண்டுகள் ஆரம்பமாவதால் ஆனி மாதம் 5ஆம் திகதி முதல் ஐப்பசி மாதம் 16ஆம் திகதி வரை மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இக்காலத்தில் முக்கியமான எந்த முடிவுகளையும் எடுக்கவேண்டாம். அவ்வாறு எடுத்தால் அது நிறைவாகாது. சனிப் பெயர்ச்சியால் குருபார்வை இருப்பதால் நன்மையான பலன்களே விளையும். ஐப்பசி மாதத்திற்கு பிறகு யோகமான காலம் ஆகும். திருமணத்தடை நீங்கும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தனம் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் அதிகரிக்கும். இவ்வாறான நல்ல பலன்களே இவ்வருடத்தில் உள்ளது.

பரிகாரம்: வருடத்தில்  இருமுறையாவது வியாழக்கிழமை அன்று ரம்பொட ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று சுவாமியை தரிசிப்பதோடு வடை மாலை சாத்தி வழிபட துன்பம் விலகி நன்மை உண்டாகும்.
விசாகம் 4, அனுசம், கேட்டை ணிடிய ஆக 9- பாதங்கள்.

சகோதரகாரகனாகிய செவ்வாயை ஆட்சி வீடாக கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே..!
  
இவ்வருடம் ஆனி மாதம் 5ஆம் திகதி நடக்கும் குருபெயர்ச்சியும் ஆனி மாதம் 28ஆம் திகதி நடக்கும் சனி மற்றும் ராகு - கேது பெயர்ச்சிகளும் உங்களுக்கு நல்ல பலன்களையே தரும் இடத்தில் அமைந்துள்ளது. ஐப்பசி மாதம் 16ஆம் திகதி ஏற்படும் ஜென்ம சனி உச்சம் பெற்று குருவின் பார்வையில் யோக காரணாக மாறுகிறார். எனவே இவ்வருடம் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிட்டும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் உதவி கிடைக்கும். வைகாசி மாதம் தங்கம் வாங்க ஏற்ற மாதம் ஆகும். பங்கு வர்த்தகம் போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும். மார்கழி மாதம் ணிதல் பங்குனி மாதம் வரை பணத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். தொழிலில் ணின்னேற்றம் அடைய சில பிரச்சினைகளை  எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எந்த காரியத்தை செய்தாலும் சில அலைச்சலுக்கு பிறகே வெற்றி அடையும். இந்த காலகட்டத்தில் சாதகமான பலன்கள் கிடைக்க சனிக்கிழமை நவகிரகங்களை வழிபாடு செய்து வர பாதிப்பு நீங்கும். இவ்வாறான நல்ல பலன்களை கொண்ட ஆண்டு இது.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வணங்கி வர தீமைகள் விலகி நன்மை உண்டாகும்.மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தேவகுரு பிரகஸ்பதியை ஆட்சி வீடாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

கடந்த வருடத்தில் உங்கள் ராசிக்கு குருபார்வை இருந்ததாலும் குருவுக்கு கேது பார்வை இருந்ததாலும் குருவுக்கு மிதுனம் பகை வீடாக இருந்ததாலும் குரு பார்வையால் உங்கள் ராசிக்கு நல்ல பலன்களை தரணிடியவில்லை. இவ்வருடம் ஆனி மாதம் 28ஆம் திகதி நிகழும் ராகு - கேது பெயர்ச்சி 4ஆம் இடத்தில் இருந்து 10ஆம் இடமான சுக ஜீவன் ஸ்தானத்தில் அமைகிறது. ஐப்பசி மாதம் 16ஆம் திகதி ஏற்படும் சனிப் பெயர்ச்சியால் ஏழரை சனி ஆரம்பிக்கின்றது. இவ்வருடம் வீடு அல்லது தொழில் ஸ்தாபனத்தை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். வயிற்றில் உஷ்ணம், வாயு சம்பந்தப்பட்ட நோய், சர்க்கரை நோய்  ஏற்படக்கூடும். மருத்துவரை நாடுவது நலம். வியாபாரத்தில் பல நஷ்டங்களை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்வில் சில சிக்கல், குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொடர்ச்சியாக பகை உருவாகும். கொடுக்கல் - வாங்களில் சிக்கல் ஏற்படும். இருந்தபோதிலும் ஆடி மாதத்தில் உங்கள் ஜென்ம  நட்சத்திரத்தன்று கணபதி  ஹோமம், ஆயுள் ஹோமம் செய்துவர இப்பாதிப்பு குறைந்து நன்மை அதிகரிக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவக்கிரக வழிபாடும் 8 நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வர துன்பம் விலகும்.உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2 -ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தொழில் காரகனாகிய சனிஸ்வரனை ஆட்சி வீடாக கொண்ட மகர ராசி அன்பர்களே..!

இந்த வருடம் ஆனி மாதம் 5ஆம் திகதி நிகழும் குரு பெயர்ச்சியில் உங்களுக்கு குருபலன் பரிபூரணமாக வருகிறது. ஆனி மாதம் 28ஆம் திகதி நிகழும் ராகு - கேது பெயர்ச்சியும் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாகவே அமைகிறது. ஐப்பசி மாதம் 16ஆம் திகதி உள்ள சனி பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமாகவும் லாபஸ்தானத்தில் அமைகிறது. எனவே இவ்வருடம் அதிர்ஷ்டமானதாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன் - மனைவி இடையே உள்ள பிணக்குகள் தீரும். வாழ்வில் பதவி உயர்வு தேடிவரும். மாணவர்களின் கல்வியில் ணின்னேற்றம் அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம், தங்கம் வாங்கும் யோகம் உண்டு. குழந்தைகளால் மேன்மையும் சந்தோஷணிம் ஏற்படும். குடும்பத்தில் சுப செலவு அதிகரிக்கும். வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும். வாழ்வில் அனைத்தும் நன்மையாகவே நடக்கும் காலம் இது.

பரிகாரம்: வியாழக்கிழமை கிருஷ்ணரை வழிபாடு செய்து வருவதால் அனைத்து யோகமும் தடையின்றி  கிட்டும்.அவிட்டம் 3, 4, சதயம், புரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஆயுள் காரணாகிய சனீஸ்வரனை ஆட்சி வீடாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

கடந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு குருபார்வை இருந்தாலும் உங்கள் ராசி நாதன் சனிபகவான் ராகுவின் பிடியில் இருந்தார். மற்றும் குருபகவான்  பகை பெற்று இருந்ததால் குருவுக்கு பலமும் பர்வையும் இல்லாமல் இருந்தது. ஆகவே  தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து இருப்பீர்கள். இந்த வருடம் ஆனி மாதம் 5ஆம் திகதி குருபகவான் உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்ய போகிறார். எனவே கடன் வாங்கி வீடு, காணி வாங்கும் யோகம் ஏற்படும். ஆனால் கடன்கொடுத்தால் தீமையே விளையும். ஆனி மாதம் 28ஆம் திகதி ராகு - கேது 2ஆம் இடத்தில் இருந்து 8ஆம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆனி, ஆடி மாதங்களில் தொலை தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்ஷது. மாணவர்கள் கடினமாக ணியற்சி செய்தால் மட்டுமே பரீட்சையில் நல்ல பெறுபேற்றை பெறலாம். சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் திருமணம் போன்ற சுப காரியங்களை மேற்கொள்ளலாம். ஐப்பசி 16ஆம் திகதி நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் தொழிலில் படிப்படியான முன்னேற்றத்தை கொடுக்கும். மனநிறைவான வாழ்க்கை உண்டாகும். பெற்றறோருக்கு நன்மை  அதிகம். ஆரோக்கியம் வலுவடையும். தேவைகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். மத்திம பலன்களை கொண்ட காலம் இது.

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று விநாயகப் பெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி கொழுக்கட்டை படைத்து மனமுருகி வணங்கிவர நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

தேவ குருவை ஆட்சி வீடாக கொண்ட மீன ராசி அன்பர்களே..!

ஆனி மாதம் 5ஆம் திகதி உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்திற்கு பெயர்ச்சி அடைந்து உச்சம் பெறுகிறார். ஆனி மாதம் 28ஆம் திகதியன்று ராகு - கேதுக்கள் 1, 7ஆம் இடங்களில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ராகு - கேதுவுக்கு லனமும் கன்னியும் நட்பு ஸ்தானமாக இருப்பதாலும் கேதுவுக்கு குருபார்வை பெறுவதாலும் மிகவும் நல்ல பலன்களே உள்ளன. ஜப்பசி மாதம் 16ஆம் திகதியில் அஷ்டம சனியும் முழுமையாக விலகுவதால் இனிமேல் உங்களுக்கு மிகவும் யோகமான காலமாகும். கடந்த இரண்டரை ஆண்டு காலம் அனுபவித்த துன்பம், கஷ்டம், பிரச்சினைகள் விலகி நல்லதொரு வழிகிடைக்கும். குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். திருமணம் கைகூடும். மனமகிழ்ச்சி அடையும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். குழந்தைப் பாக்கியம் கிட்டும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடலாம். வியாபாரம் விருத்தி அடையும். வீடு, மனை, வாகனம் வாங்கம் யோகம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். கணவன் - மனைவி உறவு மேம்படும். மிகவும் நல்ல பலன்களை தரக்கூடிய ஆண்டு இது.

பரிகாரம்: சித்திரை மாதத்தில் வீட்டில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் செய்ய நன்மை அதிகரிக்கும். அத்தோடு சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலமும் நல்ல பலன் கிட்டும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--