2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

மேலும் 262 பேர் நாடு திரும்புகின்றனர்

Editorial   / 2021 ஜனவரி 13 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் இருந்து மேலும் 262 பேர் நாடு இன்று நாடு திரும்புகின்றனர்.

இந்தியாவில் இருந்து 13 பேர், பங்களாதேஷில் இருந்து 12பேர், சிங்கப்பூரில் இருந்து 11 பேர், துருக்கியில் இருந்து 06 பேர், சீனாவில் இருந்து 06 பேர், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து 14 பேர் மற்றும் மாலைத்தீவில் இருந்து 03 பேர் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை வந்தடைந்ததும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.

இதேவேளை, இன்று(13) அதிகாலை மேலும் 197 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மாலைத்தீவில் இருந்து 10 பேர், கட்டாரில் இருந்து 114 பேர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 73 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், முப்படையினரின் கண்காணிப்பில் உள்ள 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6606 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .