2021 மே 12, புதன்கிழமை

' சிறையில் இருந்து மடல்கள்' கவிதைத் தொகுப்பு வெளியீடு

Thipaan   / 2016 ஜூலை 24 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிரவன், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்ட முத்தமிழ் சங்கத்தினால் மாயன் இரா.ஸ்ரீ.ஞானேஸ்வரன் எழுதிய  ' சிறையில் இருந்து மடல்கள்' என்னும் கவிதைத் தொகுப்பு, நேற்று சனிக்கிழமை (23) மாலை 3.30 மணிக்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவு வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, மூதூர் கிழக்கு சேனையூர் மத்திய கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் க.இரத்தினசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் நூலாசிரியர் இரா.இஞானேஸ்வரனிடம் இருந்து முதல் பிரதியினை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் பெற்றுக் கொண்டார்.

அறிமுக உரையினை ஊடகவியலாளரும் ஓய்வுநிலை அதிபருமான திருமலை நவமமும்,  விமர்சன உரையினை உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை தலைவர் அ.சத்தியநாதனும் நிகழ்த்தினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .