2021 மே 15, சனிக்கிழமை

'வண்ணக் கோலங்கள்'

Sudharshini   / 2016 ஜூலை 28 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றமும் சுனேரா நிறுவனமும் இணைந்து மாற்றுவலுவுள்ள பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் ஏற்பாடு செய்துள்ள 'வண்ணக் கோலங்கள்' கலைநிகழ்வு, வெள்ளிக்கிழமை (29) மாலை 4 மணிக்கு திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் பா.செந்தில்நந்தனனும் சிறப்பு விருந்தினராக அருட்சகோதரி கிறிஸ்ரா மரியதாஸூம் கலந்துகொள்ளவுள்ளனர்.

கலை நிகழ்வுகளாக உடுவில் ஆர்க் மாற்று ஆற்றல் உடைய பிள்ளைகள் வழங்கும் நடனங்கள், பாடல்கள், நாடகங்கள் என்பன இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .