2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

வில்லுப்பாட்டு போட்டியில் மூன்றாமிடம்

Kogilavani   / 2017 மே 23 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ   

தமிழ்மொழி தினப் போட்டியில், சப்ரகமுவ மாகாண மட்டத்திலான வில்லுப்பாட்டு பிரிவில், தலுகலை தமிழ் வித்தியாலயம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.  

சப்ரகமுவ மாகாண மட்டத்திலான தமிழ் மொழிதினப் போட்டிகள், கேகாலை, அட்டுளுகம கல்வி அபிவிருத்தி மத்திய நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.   

வில்லுப்பாட்டு பிரிவில், ஏழு பாடசாலைகள் போட்டியிட்டதுடன் அதில், தலுகலை தமிழ் வித்தியாலயம் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது.  

வில்லுப்பாட்டு போட்டியில் வெற்றிபெற்ற தலுகலை தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கும் வில்லுப்பாட்டை பயிற்றுவித்த பாடசாலை ஆசிரியர் எஸ்.சசிகாந்தன் மற்றும் பாடசாலை அதிபர் எம்.சந்திரகுமார் ஆகியோருக்கும் பாடசாலை நிர்வாகம் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X