Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்திற்கென்று தனித்துவமான கலை, பண்பாடு, இலக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் எமது பண்பாட்டுடன் பின்னி பிணைந்து இருக்கின்ற கலை இலக்கிய அம்சங்களை பேணி பாதுகாப்பதற்கு தமிழ் இலக்கிய விழா போன்ற ஆக்கபூர்வமான நிகழ்வுகள் ஓர் ஆரம்பமாகும்' என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடத்திய தமிழ் இலக்கிய விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அரங்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கிழக்கு மாகாணத்திற்கே உரித்தான கலைஞர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் பண்பாட்டு கலை சார் நலன்; விரும்பிகளையும் இவ்வாறான நிகழ்வின் ஊடாக நாம் முன்னிலைப்படுத்தி கௌரவிப்பது கிழக்குமாகாணத்தில் பிறந்த ஒவ்வொருவருக்குமுரிய கடமையாகும்.
பண்பாட்டுடன் கூடிய கலையம்சங்களை பேணி பாதுகாப்பதென்பது இலக்கிய படைப்பாளிகளின் பொறுப்பு மாத்திரம் அல்ல. அவ் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கலை, இலக்கிய துறையில் ஆர்வம் காட்டுகின்ற ஒவ்வொருவரினது தேவையாகும்.
காலத்தின் கட்டாய தேவை உணர்ந்து தமிழருக்கான இலக்கிய பாரம்பரியமும் கலாசார விழுமியங்களும் தொன்றுதொட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வாறாக வளர்க்கப்பட்டு வரும் எமது மக்களின் அரும்பெரும் பொக்கிசமாக விளங்குகின்ற இக் கலையம்சங்களை தொடர்ந்தும் நாம் பேணி பாதுகாப்பதற்கு களம் அமைக்க வேண்டும்.
பாரம்பரிய உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதனூடாக மறைந்த எமது கலையம்சங்களை இளம் தலைமுறையினருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் கோடிட்டுக்காட்ட முடியும். எது எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த சமாதான சூழலில் கிழக்கு மாகாணத்திலே பிறந்த ஒவ்வொரு இலக்கிய துறையினருக்கும் எம்மாலான இயன்ற பணிகளை ஆற்றுவதற்கு நாம் அனைவரும் முன்வர வேண்டும் எனவும் தனது உரையில் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரும், கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளரும் ஏ.எம்.ஈ.போல் தலைமையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கே.பத்மராஜா, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் இலக்கிய திறனாய்வாளர்கள், பண்பாட்டலுவல் திணைக்கள பணிப்பாளர், மற்றும் கலாசார உத்தியோகஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது, 12 கலைஞர்களுக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விருது வழங்கி கௌரவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025