2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

'காலம் மாறுது' ஒலிப்பேழை வெளியீடு

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதிய மலையகம் மற்றும் தேசிய கலை இலக்கியப் பேரவை ஆகியவற்றின் இணைந்த வெளியீடாக வெளிவந்த 'காலம் மாறுது' பாடல்கள் ஒலிப்பேழையின் வெளியீட்டு நிகழ்வு கடந்த வாரம் கஹவத்தையில் (பெல்மதுல்ல தமிழ் வித்தியாலய மண்டபத்தில்) இடம்பெற்றது. ஒலிப்பேழையை இலங்கையின் முன்னணி இசையமைப்பாளர் கருப்பையாபிள்ளை பிரபாகரன் வெளியிட்டு வைத்தார்.

பிரதேசத்தில் உள்ள மதகுருமார்கள், தொழிலாளர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரது பங்குபற்றலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் ரா.நெல்சன் மோகன்ராஜ் வரவேற்புரையை வழங்கி பாடல்கள் ஒலிப்பேழையை அறிமுகம் செய்துவைத்தார். பா.மகேந்திரன், விசு.கருணா, இரா.நிர்ஷன், வே.மகேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இசையமைப்பாளர் க.பிரபாகரன் வாழ்த்துரையை வழங்கினார். சு.விஜயகுமார் நன்றியுரை வழங்கினார். வே.தினகரன் நிகழச்சிகளை தொகுத்து வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .