2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா சனிக்கிழமை ஆரம்பம்

Super User   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா - நாளை மறுதினம் சனிக்கிழமை மட்டக்களப்பு கிழக்கு  பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர அழகியல் கற்கைகள் கல்லூரியில் ஆரம்பமாகவுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் மூன்று நாட்களை கொண்ட மேற்படி இலக்கிய விழாவில் - பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுரைகளும், கலை மற்றும் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெறும் இந்த இலக்கிய விழாவின் முதல் நாள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் கே. விமலநாதன் பிரதம அதிதியாகவும், இறுதி நாள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ். சார்ல்ஸ் பிரதம அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

விழாவின் முதல் மற்றும் இரண்டாம் நாட்களில் இடம்பெறும் அமர்வுகளில் - 'களுதாவளை பறையர் சமூகத்தில் வாழ்வியல் அனுபவ பகிர்வு', 'சடங்கு வழிபாட்டு முறையில் பெண்களின் பங்கு' போன்ற தலைப்புக்களில் ஆய்வுரைகள் இடம்பெறவுள்ளன. 'பறங்கியர் சமூகமும் சடங்குகள்', 'தொல்லியல் ஆய்வும் மட்டக்களப்பு வரலாறும்', 'மட்டக்களப்பில் அருந்ததி சமூகம்', 'மருத்துவிச்சிகளின் கடந்தகால பணிகளும், நிகழ்கால சவால்களும்' 'மட்டக்களப்பு முஸ்லிம்களின் நாட்டாரியல்' போன்ற தலைப்புக்களில் ஆய்வுரைகள் இடம்பெறவுள்ளன.

இறுதி நாள் நிகழ்வாக நாடக விழா இடம்பெறவுள்ளது. இதில் - குரங்குளின் ராச்சியம், மீட்பு உள்ளிட்ட நாடகங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .