2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வவுனியா பிரதேச கலை இலக்கிய விழா

Kogilavani   / 2012 நவம்பர் 11 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

வவுனியா பிரதேச கலாசார பேரவை மற்றும் வவுனியா பிரதேச செயலகம் இணைந்து நடத்திய பிரதேச கலை இலக்கிய விழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

'கலைஞர் சுவைஞர் அரங்கம்' எனும் தொனிப்பொருளில் வட்டூர் கவிஞர் சித்தாந்த வித்தகர் கதிர் சரவணபவன் அரங்கில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, பல கலைஞர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வவுனியா மாவட்டத்தில் கலைப்பணியில் ஈடுபட்ட மூவர் கௌரவிக்கப்பட்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .