2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

'இப்படிக்கு இதயம்' நூல் வெளியீட்டு விழா

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


மட்டக்களப்பு மாவட்டத்தின் செட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சொற்சிற்பி இ.சபா எழுதிய 'இப்படிக்கு இதயம்' ன்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 25ஆம் திகதி மாலை 3 மணிக்கு செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தின் விபுலானந்தர் மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மனோகரனும் சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் செயலாளர் ஓ.கே.குணநாதன், சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர் ஏ.நிசாந்தன், மற்றும் எஸ்.முகுந்தன் ஆகியோர்  கலந்துகொள்ளவுள்ளனர்.

நூலின் நயவுரையை இலக்கிய ஆய்வாளரும் கவிஞருமான ஜெஸ்மி எம்.மூசா நிகழ்த்தவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .