2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி கண்காட்சியும் கலை நிகழ்வும்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் புத்தகக் கண்காட்சியும் கலை நிகழ்வுகளும் இம்மாதம் 25ஆம் திகதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக அந்தப் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் புத்தகக் கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அதேவேளை புத்தக விற்பனையாளர்களும் இங்கு வருகைதரவுள்ளனர். மேலும் ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை பாடசாலை மாணவர்களிடையே வாசிப்பு மாதம் தொடர்பான போட்டிகளை  நடத்தி வருகின்றோம்.

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு பாரிய மேடையமைத்து கலை, கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றவுள்ளோம். அட்டாளைச்சேனை பிரதான வீதியருகில் அமையவுள்ள மேடையில் இந்நிகழ்வுகள் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நடைபெறவுள்ளது. 

இதன்போது, இந்தப் பிரதேசத்தின் புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .