2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

அரங்க ஆற்றுகைகளும் காட்சிக்கூடமும்

Kogilavani   / 2013 ஜூலை 29 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மூன்றாவது வருடமாக ஆலய முன்றலில் பாரம்பரிய அரங்க காட்சிக கூடத்தினையும் அரங்க ஆற்றுகைகளையும் இவ்வாண்டும் நிகழ்த்த உள்ளது.

இதற்கமைவாக, 01.08.2013 முற்பகல் 10 மணிக்கு நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில் இடம்பெறும் ஆரம்பநிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கி.கோபிந்தராஜா, சிறப்பு அதிதிகளாக கலைகலாசாரப் பீடாதிபதி. பேராசிரியர்.மா.செல்வராசா, சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி.க.பிரேம்குமார்;, கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் கே.மகேசன், மாமாங்கப் பிள்ளையார் ஆலய வண்ணக்கர் த.அகிலன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் 01.08.2013 தொடக்கம் 04.08.2013 வரை இந்நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.

இந்நாட்களில் மாலை 5 மணிக்கும் இரவு 11.மணிக்கும் பாரம்பரிய கூத்து ஆற்றுகைகள் நிகழ்த்தப்படவுள்ளன.

இதில் தப்பு இசை, நுண்கலைத்துறையின் 'மழைப்பழம்' வடமோடி சிறுவர் கூத்து, 'கண்டியரசன்' தென்மோடிக் கூத்து, பண்டாரியாவெளி நாகர் கலைமன்றத்தின் 'நொண்டி நாடகம்' தென்மோடிக் கூத்து, முனைக்காடு நாகசக்தி கலைமன்றத்தின் 'அலங்காரரூபன்' தென்மோடிக் கூத்து, கரவெட்டி கலைக்கழகத்தின் 'பூதத்தம்பி விலாசம்', வாதக்கல்மடு கலைஞர்களின் 'கண்டியரசன் ஒப்பாரி' ஆகிய பாரம்பரிய நிகழ்த்து கலைகளின் ஆற்றுகைகள் இடம்பெற உள்ளன.

இத்துடன் பாரம்பரிய கூத்துக்கலையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கி வரும் உடை ஒப்பனைக் கலைஞர்களும், சதங்கைகளை பாதுகாத்து பராமரித்து வரும் கலைஞர்களும், மத்தளங்களை உருவாக்கி இணக்கி வரும் கலைஞர்களும் துணைவேந்தரால் கௌரவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X