2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

விளை நிலம் கண்காட்சி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு வின்சன் உயர்தர மகளீர் தேசிய பாடசாலையில் விளை நிலம் கண்காட்சியும் திறப்பு விழாவும் துளிக்கும் தூரிகை வெளியீட்டு விழாவும்  இன்று(04) காலை பாடசாலை அதிபர் திருமதி க.இராஜகுமாரி தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறைத் தலைவர் கலாநிதி எஸ்.ஜெயசிங்கம், மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சி.கங்கேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு பயன்தரும் பல்வேறு விடயங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை மாலை நிறைவு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .