2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

கவியரங்கு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


சம்மாந்துறை படர்க்கைகள் இணையம் மற்றும் கலை இலக்கிய ஒன்றியம் என்பன இணைந்து நடாத்தும் 'சமூக நேசம் எங்கள் சுவாசம்' எனும் தலைப்பிலான கவியரங்கமும் உரையரங்கமும்  ஞாயிற்றுக்கிழமை (13)    சம்மாந்துறை     தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

வித்தியாகீர்த்தி இறையருட் கவிஞர் ஏ.இப்றாஹீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு இரண்டு அங்கங்களாக நடைபெற்றது.

முதலாவது கவியரங்கம் நிகழ்வு சிரேஷ்ட சட்டத்தரணியும் பொதுஜன சேவா மன்றத்தின் தலைவருமான கே.எல்.அப்துல் சலீம் தலைமையிலும் இரண்டாவது உரையரங்கம் அதிபர் கவிஞர் ஏ.சீ.எம். இஸ்மாயீல் தலைமையிலும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கவிதை உரைப்பதற்காக  ஓய்வு பெற்ற அதிபர் கலாபூசணம் கலைமணி ஏ.சீ.எம்.இஸ்மாலெப்பை, கலாபூசணம் சம்மாந்துறை ஏ.அஸீஸ்,  கவிஞர் எஸ்.எல்.எம்.இஸ்மாயீல், கவிஞினி முபீதா ஆகியோர்  கலந்து கொண்டதுடன் இசைப்பாடலை ஏ.எல்.ஏ.றசூல் ஏ.கே.ஆர்.அஸீஸ் நிகழ்த்தினர்.

அதனை தொடர்ந்து ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பதிவாளர் கவிஞர் மன்சூர் ஏ.காதர் அவர்களினால் 'சமுக நேசம் எங்கள் சுவாசம்' எனும் கவிதை தொகுப்பு நூலின் முதல் பிரதியினை ஓய்வு பெற்ற அதிபர் கலாபூஷணம் எஸ்.எச்.ஏ.றாசீக்கு வழங்கி வைக்கப்பட்டன.
 
இந்த நிகழ்வுகள் அனைத்தும் சம்மாந்துறை படர்க்கைகள் இணையத்தின் தலைவர் இஸ்மா பரீட், மற்றும் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளரும் நூலாசிரியருமான     எம்.ஐ.பௌஸ்தீன்     ஆகியோரினால் நெறிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--