2021 மே 18, செவ்வாய்க்கிழமை

உண்மைக்கு உடை வேண்டுமா?

Princiya Dixci   / 2015 ஜனவரி 30 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்லவி

உண்மைக்கு உடை வேண்டுமா – ஞான
உண்மைக்கு உடை வேண்டுமா – உள்ள
உறுதிக்குத் துணை வேண்டுமா

அனுபல்லவி

சொல்லாலும் செயலாலும் கருத்தாலும் ஒன்றான        (உண்மைக்கு)

சரணம்

    1. பொய்கூறிப்புறம் பேசும் போலிகள் - அறிவுக்குப்
        புத்தகம் வழி காட்டுமா - வேதப்
        புத்தகம் வழி காட்டுமா -  ஞான
        தத்துவம் தலைகாட்டுமா                    (உண்மைக்கு)

    2. மாடிப்படி வீட்டில் வாசம் செய்தாலுமென்
        மோட்சப்படி கிட்டுமா – உயர்
        மோட்சப்படி கிட்டுமா – தெய்வக்
        காட்;சி நிலை கிட்டுமா                    (உண்மைக்கு)

    3. ஆதியைத் தேடி நீ அருள் பெற நாடினால்
        ஜோடியை நீக்கு நீ தோழா - இணை
        ஜோடியை நீக்கு நீ தோழா – உள்ள
        ஜோதியில் மூழ்கு நீ நேசா                (உண்மைக்கு)

-ஷெய்ஹூல் முப்லிஹீன் எம். எஸ் எம் அப்துல்லாஹ் (றஹ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .