2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

உலக சாதனை பூசணிக்காய்

Kogilavani   / 2010 நவம்பர் 09 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவிலுள்ள பூசணிக்காயொன்று உலகின் அதிக எடை கொண்ட பூசணிக்காயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்கொன்ஸின் மாநிலத்தின் ரிச்மொன்ட் நகரைச் சேர்ந்த கிறிஸ் ஸ்டீவன்ஸ் என்பவர் இப் பூசணிக்காயை வளர்த்துள்ளார். இதனது நிறை 1,810 இறாத்தல்கள் (821 கிலோகிராம்) ஆகும். இப்பூசணிக்காயின் அகலம் 15 அடியாகும்.

இதற்கு முன்பு அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தைச்  சேர்ந்த நிக் மற்றும் கிறிஸ்டி ஹார்ப்பி என்பவர்களால் வளர்க்கப்பட்ட 1,725 இறாத்தல்கள் எடையுடைய பூசணிக்காய் உலக சாதனையை நிலைநாட்டியிருந்தது.

இச்சாதனையை  கிறிஸ் ஸ்டீவன்ஸின் பூசணிக்காய் முறியடித்துள்ளது.

ஸ்டீவென்ஸ் இப்பூசணியின்  பெரிய நிறை குறித்து கூறும்போது முறையான சூரிய ஒளி, மழை,  மாட்டுக் கழிவுகள், மீன் கழிவுகள்,  மற்றும் கடற்பாசி போன்றவற்றை உரமாக பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

'நாங்கள் அதிர்ஷ்டவசமாக இரண்டு ஜோடி சிறந்த விதைகளை பெற்றுக்கொண்டோம். அத்துடன் நாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்திருந்தோம்.  பல காரணங்களால் உலக சாதனைக்குத் தெரிவு செய்யப்படாமல் போகலாம் என்பதால் அதிகாரிகள் அப்பூசணிக்காயின் எடையை அளக்கும்போது எமக்கு பதற்றமாக இருந்தது.

இந்த உலக சாதனை பூசணிக்காய்க்கு 50 சதவீதம் மரபியல் காரணமாகும். ஏனைய 50 சதவீத காரணம் அன்பும்,  முறையான பராமரிப்பும்தான்' எனவும் ஸ்டீவன்ஸன் தெரிவித்துள்ளார்.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--