2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

220 அடி உயரமான தேநீர் குவளை

Kogilavani   / 2010 நவம்பர் 16 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவிலுள்ள  தேநீர் பிரியர்கள் சிலர் இணைந்து உலகின் மிகப்பெரிய தேநீர்குவளையொன்றை உருவாக்கியுள்ளனர்.

பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் இக் குவளையின்  உயரம் 220 அடியாகும். இக்குவளையில் 28 மில்லியன் லீற்றர் தேநீரை நிரப்ப முடியும்.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள  மேய்டென் பகுதியில் இவ் மிகப்பெரிய குவளை உருவாக்கப்பட்டுள்ளது. இக்குவலையில் சீனர்கள் பருகும் அனைத்து தேநீர்களையும் உள்ளடக்க முடியும்.

தேநீர் பிரியர்கள் தேநீருக்கான தங்களது காணிக்கையாக இத்தேநீர் குவளையை தயாரித்துள்ளனர். அதனுடன் தேநீர் கோப்பையொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் தங்களது தேநீர் குவளையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவதற்காக கின்னஸ் அலுவலர்களை தொடர்புக்கொண்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .