2021 மே 08, சனிக்கிழமை

அனுஷ்காவின் திகில் பிரவேசம்

George   / 2015 நவம்பர் 24 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருந்ததி திரைப்படத்தின் மூலம் தமிழ் தெலுங்கில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்த அனுஷ்கா மீண்டும் ஒரு திகில் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 

ருத்ராக்ஷா என பெயரிடப்பட்டுள்ள அத்திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கவுள்ளார். தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனரனா கிருஷ்ண வம்சி, ராம் சரண் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் இறுதியாக இயக்கிய கோவிந்துடு அண்டரிவடேலே சுமார் வெற்றியே பெற்றது. 

கிருஷ்ண வம்சி இயக்கவுள்ள ருத்ராக்ஷா திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளாராம். மேலும் இப்திரைப்படத்தில் ஐந்து ஹீரோக்கள் நடிக்கவுள்ளதாகவும் அவர்கள் முன்னணி நடிகர்களா அல்லது புதுமுகங்களா என விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது. 

அனுஷ்கா ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற பெயரிலும் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரிலும் நவம்பர் 27ஆம் திகதி வெளிவரவுள்ளது. 

இத்திரைப்படத்துக்குப் பின்னர் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அனுஷ்கா தயாராகி வருகின்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X