2021 ஜனவரி 27, புதன்கிழமை

இன்னொரு பிறவி வேண்டும்

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' வெளியாகும் அதே நாளில் (22ஆம் திகதி), ஹந்தி நடிகர் இர்பான்கான் நடித்த 'மதாரி' என்ற இந்திப்படமும் வெளியாகிறது. குழந்தைகளுக்காக, 'மதாரி' படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய இர்பான்கானிடம், 'கபாலி'யுடன் அவரது படம் மோதுவது பற்றி வினவப்பட்டது. அதற்கு இர்பான்கான் கூறியதாவது,

'இது மோதல் அல்ல. ரஜினிகாந்த், ஒரு பெரிய மனிதர். உலகம் முழுவதும் தெரிந்த பெரிய நடிகர். அவருக்கு நான் சமம் அல்ல. அவர் படத்துடன் என் படம் வெளியாவதே எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். நாங்கள் போட்ட பணத்தை விட கொஞ்சம் அதிகம் வசூல் கிடைத்தாலே நாங்கள் சந்தோஷப்படுவோம். ஒரு மனிதராக ரஜினியை நான் மதிக்கிறேன். அவருடன் போட்டியிட நான் இன்னொரு பிறவி எடுத்துவர வேண்டும்' என்றாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .