2021 மே 06, வியாழக்கிழமை

ஒரே நாளில் இந்திய ரூ.250 கோடி: வசூல் சாதனையில் கபாலி

George   / 2016 ஜூலை 24 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படம் முதல்நாளில் இந்தியாவில் மட்டும் இந்திய ரூ.250 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

'உலகம் முழுவதும் 8000 இடங்களில் திரையிடப்பட்ட இத்திரைப்படம் முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது' என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு இந்திய நடிகரின் திரைப்படமும் இதற்கு முன் இத்தகைய தொகையை வசூலித்ததில்லை எனவும், இது ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் என்பதால் மட்டுமே இத்தனை வரவேற்பு பெற்றுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதில் தமிழகத்தில் மட்டும் இந்திய ரூ.100 கோடியும் இந்தியாவின் பிற பகுதிகளில் இந்திய ரூ.150 கோடி  வசூலித்துள்ளது.

இலங்கை, அமெரிக்கா, மலேசியா, வளைகுடா நாடுகள், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க், ஹாலாண்ட், ஸ்வீடன், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் கபாலி திரைப்படம் சராசரியாக இந்திய ரூ.250 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0

  • kannan Sunday, 24 July 2016 03:59 PM

    Padam super, malaysiavil paarkumbhotu padatai romba cut pannidangga. Atuthan konjam kavalaiya iruku. Naan oru Malaysia tamilan. Super star yengga naadil nadicatu Malaysia tamilargalin unmai kataiyai ulagatidku avar kaadiyatadkum, avarukku romba nandri.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .