Editorial / 2025 டிசெம்பர் 14 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் சேதமடைந்த கால்வாய்களை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த அம்பாறை தலைமையக முகாமைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 பேர் குளவிக்கொட்டுக்கு உள்ளாகி படுகாயமடைந்து பண்டாரவளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பண்டாரவளை காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சேதமடைந்த பண்டாரவளை காவல் பிரிவின் வரக்க தண்டா கிராம சேவைப் பிரிவில் உள்ள கால்வாயை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் இருந்த குளவி கூடு கலைந்து கொட்டியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10 பேர் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை (14) அன்று வீடு திரும்பியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago