2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கவர்ச்சி ஆவேசத்தில் நமீதா

Gavitha   / 2016 ஜூலை 19 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீகாந்த்-லட்சுமிராய் நடித்த சௌகார் பேட்டை படத்தை தயாரித்த வடிவுடையான், தற்போது பொட்டு என்ற படத்தை இயக்கி வருகின்றார். இந்தப்படத்தில் பரத் மற்றும் நமீதா, இனியா ஆகியோரும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கின்றார்கள். குறிப்பாக, இதுவரை கவர்ச்சி புயலாக நடித்து வந்த நமீதாவை இந்த படத்தில் பயங்கரமான மந்திரவாதி வேடத்தில் நடிக்க வைத்திருக்கின்றார் வடிவுடையான்.

கதைப்படி இந்தப் படத்தில் இளம் பெண்களை கொன்று சுடுகாட்டில் புதைத்து அந்த சக்திகளை வசப்படுத்தும் மந்திரவாதியாக நமீதா நடிக்கின்றார். இந்த மந்திரவாதி கெட்டப்புக்காக தலையில் இருந்து முட்டி வரை ஜடாமுடியை தொங்கவிட்டபடி, கழுத்தில் எழும்புக்கூடு மாலைகளை தொங்கவிட்டு நடித்திருக்கும் நமீதா, பேண்ட்-டீசர்ட் அணிந்து கவர்ச்சியரமாகவே நடிக்கிறாராம். அதேசமயம் கவர்ச்சியை விட ஆவேசமே தூக்கலாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்கள், முகபாவனைகளில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றாராம் நம்ம நமீதா.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .