2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

கவர்ச்சியாக நடிக்கவைத்து மதிப்பை குறைத்துவிட்டனர்: தப்ஸி கவலை

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஆடுகளம்' திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானவர் நடிகை தப்ஸி, தற்போது அவருக்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் இல்லை. தெலுங்கிலும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடிக்கிறார்.

இதனால் வாய்ப்பு தேடி பொலிவூட் பக்கம் சென்ற தப்ஸிக்கு 2 ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.  

இது தொடர்பில் தப்ஸி தெரிவிக்கையில், 'நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் நிறைய திரைப்படங்களில் என்னை கவர்ச்சியாகவே நடிக்க வைத்தார்கள். தெலுங்கு திரைப்படங்களில் அப்படித்தான் நான் வந்தேன். இதனால் என் மீதான மதிப்பு குறைந்தது. கவர்ச்சி வேடங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வந்தன.

எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையாமல் போனது. ஆனால், இப்போது ஹிந்தியில் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வந்துள்ளன. இதன் மூலம் எனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன்.

ஹிந்தியில் சிறந்த நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் போட்டியை சமாளித்து நிலைத்து இருப்பது கஷ்டம். ஹிந்தியில் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கிய பிறகு மற்ற மொழி திரைப்படங்களிலும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பேன்' என்கிறார் தப்ஸி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .