2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

கொந்தளித்த குஷ்பு

George   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு சுறுசுறுப்புடன் இருப்பவர் நடிகை குஷ்பு. அரசியல், சினிமா, சமூக பிரச்சனை என அவர் போடும் பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதுண்டு.

அண்மையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியொன்றை நடத்த ஆரம்பித்ததில் இருந்து குஷ்புவுக்கு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இதுநாள் வரை தனது நிகழ்ச்சி குறித்த கருத்துக்களுக்கு பொறுமையாக பதில் கூறி வந்த குஷ்பு, நேற்று திடீரென கொந்தளித்துவிட்டார்.

அநாகரீகமான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த குஷ்பு, “ஒரு சிலருக்கு அழுத்தமாக சொல்ல வேண்டி இருக்கிறது, அவர்கள் ஒரு பெண்ணில் இருந்து தான் பிறந்தவர்கள் என்றும், நாளை அவர்களுக்கும் பெண் குழந்தை பிறப்பாள் என்றும், நன்றி” என்று பதிவு செய்துள்ளார்.

இதேபோன்ற இன்னொரு அநாகரீகமான கேள்விக்கு “உங்க அம்மாவைப் பார்த்து இந்த கேள்வியைக் கேளுடா” என்று கொந்தளித்துள்ளார் குஷ்பு.

குஷ்புவின் இந்த அதிரடி தாக்குதலுக்கு பாடகி சின்மயி ஆதரவு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .