2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

மாணவர்களுக்கு இனி பாடப்புத்தகம் இல்லை

Freelancer   / 2025 ஒக்டோபர் 17 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த சுய கற்றல் கையேடுகள் தற்போது அச்சிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, குறித்த தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை பைகளின் எடையும் குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .