2021 ஜனவரி 23, சனிக்கிழமை

கிளாமருக்கு நோ

Gavitha   / 2016 ஜூலை 19 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய சினிமா உலகில் கதாநாயகிகள் கிளாமராக நடித்தால் மட்டுமே முன்னணி நடிகை பட்டியலில் இடம்பெற முடியும் என்றொரு கருத்து நிலவிய போதும், கவர்ச்சியை மட்டுமே நம்பி களமிறங்கிய நடிகைகள் யாரும் நீண்ட காலம் சினிமாவில் நிலைக்கவில்லை. நயன்தாராவை ரோல்மாடலாக கொண்டு ஹொவூட்டில் என்ட்ரியான கீர்த்தி சுரேஷூம் இது என்ன மாயம், பாம்பு சட்டை படங்களில் கமிட்டாகி நடித்த போது தேவைப்பட்டால் கவர்ச்சியான வேடங்களில் நடிக்கவும் தயாராகத்தான் இருந்தார்.

ஆனால், அதையடுத்து அவருக்கு கிடைத்த ரஜினிமுருகன், ரெமோ, விஜய்-60 ஆகிய படங்களில் ஹோம்லி மற்றும் மாடர்ன் வேடங்களாக கிடைத்ததால், இனிமேல் இதே ரூட்டை தொடரவேண்டும். கவர்ச்சி கதைகளில் நடித்து இமேஜை கெடுத்துக்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதன் காரணமாக, தன்னை தேடி வந்து கதை சொல்லும் தெலுங்குப் பட டைரக்டர்களிடமும், கவர்ச்சியில் எல்லை தாண்டமாட்டேன். பாடல் காட்சிகளில் கூட மிதமான கிளாமரை மட்டுமே வழங்குவேன் என்று கூறிவருகின்றாராம்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .