2021 மார்ச் 04, வியாழக்கிழமை

சிருஷ்டி டான்கேயின் புதுமுடிவு

George   / 2016 மே 25 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹன்சிகா, காஜல்அகர்வால், தமன்னா வரிசையில் மும்பையில் இருந்து இறக்குமதியான இன்னொரு நடிகைதான் சிருஷ்டி டான்கே. 

காதலாகி, யுத்தம் செய் ஆகியத் திரப்படங்களைத் தொடர்ந்து நடித்த மேகா திரைப்படத்தில் அவர் கவனிக்கப்பட்டதால் பல திரைப்படங்களில் ஒப்பந்தமானார். ஆனால், அப்படி அவர் நடிப்பில் வெளியான எந்தத் திரைப்படங்களுமே வெற்றி பெறவில்லை.

அதன் காரணமாக முன்னணியில் இல்லாத நடிகர்களுடன் நடிப்பதை குறைத்துக் கொண்டு, முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறிய வேடமென்றாலும் நடிக்க தயாராகி விட்டார் சிருஷ்டி டாங்கே.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி நடித்துள்ள தர்மதுரை திரைப்படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேசுக்கு அடுத்தபடியாக ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். 

'மும்பையில் இருந்து வரும் பெரும்பாலான நடிகைகளுக்கு தமிழில் ஓரிரு வார்த்தைகள்கூட பேசத் தெரியாது. ஆனால் நானோ சரளமாக தமிழ் பேச கற்றுக்கொண்டேன். இருந்தாலும் எனக்கு தமிழில் சரியான திருப்புமுனை கிடைக்காமல் உள்ளமை வருத்தமாக இருக்கிறது' என்று அங்கலாய்க்கின்றார் டாங்கே.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .