George / 2016 மார்ச் 13 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை நயன்தார, நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவுக்கு வயது ஏறிக்கொண்டே போனாலும் அவரது சினிமா மார்க்கெட்டும் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது.
கைநிறைய திரைப்படங்கள் வைத்திருக்கும் அவர், தான் நடிக்கும் எல்லா திரைப்படங்களிலுமே முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில்தான் நடித்து வருகிறார்.
தற்போது முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் குறைந்து விட்டதால், இளவட்டங்களில் முன்னணியில் இருக்கும் நடிகர்களுடன் நடித்து மார்க்கெட்டை உறுதியாகி வருகிறார் நயன்தாரா.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜயசேதுபதி நடித்த நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நடித்த நயன்தாரா, அடுத்ததாக விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திலும் நாயகியாக நடிக்கிறாராம்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ திரைப்படத்தையடுத்து மோகன்ராஜா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன், அதன் பின்னர், விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிக்கிறாராம்.
அந்தத திரைப்படத்தை அஜீத் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் போன்ற திரைப்படங்களைத் தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறாராம்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026