2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

நயனின் ஜிம் போய்

George   / 2016 மார்ச் 24 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை நயன்தார செல்லும் இடமெல்லாம் அவரது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் செல்கின்றதால் எல்லோரும் அவரை ஜிம் போய் என்று கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

விக்ரம் இரு வேடங்களில் நடிக்கும் இருமுகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விக்ரம், நயன்தாரா பங்குபெறும் பாடல் காட்சியை தற்போது படமாக்கி வருகிறார்கள். இருமுகன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நயன்தாரா வரும்போதெல்லாம் கூடவே அவரது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் வருகிறார். நயன்தாரவுடன் கடைசிவரை இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து இருவரும் ஒரே காரில் செல்கிறார்கள்.

அடுத்தத் திரைப்பட வேலையை விட்டுவிட்டு நயன்தாராவுக்கு ஜிம் போய் வேலை பார்ப்பது ஏன்? என்று விக்னேஷ் சிவன் பற்றி இருமுகன் திரைப்படக்குழுவினர் நக்கல் அடிக்கின்றனர். 

அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் நயன்தாராவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X