2021 மே 12, புதன்கிழமை

முத்தத்துக்கு தயார்

George   / 2015 நவம்பர் 18 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க நான் தயார். அந்த விடயத்தில் எந்த நிபந்தனையும் என்னிடம் இல்லை என ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

தடையறத்தாக்க, என்னமோ ஏதோ, புத்தகம் திரைப்படங்களில் நடித்த ராகுல் ப்ரீத் சிங், அந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் தெலுங்கு திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தினார்.

அத்துடன், ஒரு திரைப்படத்தில் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்து ஆந்திராவிலுள்ள இளவட்ட ரசிகர்களை சூடேற்றி விட, தொடர்நது பல திரைபடங்களில் ஒப்பந்தமானார்.

அதுமட்டுமின்றி இரண்டு ஹிந்தித் திரைப்படங்களிலும் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறாராம். அதனால், தெலுங்கு, ஹிந்தியில் முத்தக்காட்சியில் துணிச்சலாக நடிக்கக்கூடிய நடிகை என்பதற்காகவே அவரை ஒப்பந்தம் பண்ணி வருகிறார்களாம்.

தமிழைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் அடக்கிவாசித்த ராகுல்ப்ரீத்சிங், அண்மையில்; சென்னை வந்து சில கமர்சியல் இயக்குநர்களை சந்தித்துள்ளார்.

அதன்போது, தெலுங்கு திரைப்படங்களுக்கு குறையாத கவர்ச்சியுடன் நடிக்க தயாராக இருக்கிறேன், கதைக்கு அவசியப்பட்டால் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்கவும் நான் தயார். அந்த விடயத்தில் எந்த நிபந்தனையும்; என்னிடம் இல்லை என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .