2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மான் வேட்டையாடிய வழக்குகள்: சல்மான் கான் விடுதலை

George   / 2016 ஜூலை 25 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மானை வேட்டையாடிய வழக்குகளில் இருந்து பொலிவூட் நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்குகளில் கீழ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை  ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இரத்துச் செய்து இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு, அரிய வகை மான்களை வேட்டையாடியதாக சல்மான் கான் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மான் வேட்டையில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட இரு வழக்குகளில், நடிகர் சல்மான் கானுக்கு முறையே ஓராண்டு, ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஜஸ்தான் கீழ் நீதிமன்றம், 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதையடுத்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், 2007ஆம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை இரத்து செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், மான் வேட்டையாடியதாகத் தொடரப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .