2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

யோகிபாபுவுடன் திருமணம்? நடிகை விளக்கம்

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம் நடந்து விட்டதாக நேற்று (25) சமூக வலைதளங்களில் வதந்தி கிளம்பியதுடன், யோகிபாபு தனது சமூக வலைத்தளத்தில் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் யோகிபாபு திருமண வதந்தி புகைப்படத்தில் இருக்கும் நடிகை சபிதாராய் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். 

அவர் கூறியிருப்பதாவது: “இந்த வதந்தி குறித்து என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. இரண்டு நாட்களாக என்னுடைய பெயரும் காமெடி நடிகர் யோகிபாபு பெயரும் டிரெண்டிங்காக இருக்கின்றது. இந்த வதந்தியை நினைத்து சிரிப்பதா அழுவதா அல்லது கோபப்படுவதா? என்று தெரியவில்லை. 

யோகி பாபு இதற்கு மறுப்பு தெரிவித்ததற்கு நன்றி, என்னுடைய தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.

கடந்த 2017ஆம் ஆண்டு ‘கன்னிராசி’ என்ற படத்தில் நானும் அவரும் இணைந்து நடிக்கும்போது நான் எடுத்துக்கொண்ட செல்பி தான் தற்போது திருமண புகைப்படமாக வைரலாகி வருகிறது.

 ஒரு காமெடி நடிகராக அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அவருடன் நடிக்கும்போது நானே விரும்பி எடுத்த செல்பி தான் அந்த புகைப்படம். இந்த புகைப்படம் எப்படி லீக் ஆகியது என்று எனக்கு தெரியவில்லை. 

கன்னிராசி படத்தை தொடர்ந்து அவருடன் நான் மூன்று படங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றேன். இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. 

எங்களுக்குள் நடிகர் நடிகை என்ற என்பதை தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை. அவர் நல்ல மனிதர், எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான்.”

இவ்வாறு நடிகை சபிதாராய் விளக்கம் அளித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .