2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

ஹெலியில் மலர் தூவ அனுமதி கேட்ட பிரபல திரையரங்கம்

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். 

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக தர்பார் திரைப்படத்தின்   பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் திகதி வெளியாகவுள்ளது. படத்திற்கான புரோமோஷன் தமிழகம் மட்டுமின்றி மும்பையிலும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 

இந்த நிலையில் தர்பார் படம்  திரைக்கு வரும் நாளான வரும் 9 ஆம் திகதி ஹெலிகொப்டர் மூலம் மலர்தூவ அனுமதி கோரி சேலம் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மெய்யனுர் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கம் முன்பு  மலர்தூவ அனுமதி கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--