2026 ஜனவரி 07, புதன்கிழமை

‘சிலந்தி’யின் புதியது ‘நரன்’

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகை மோனிகாவின் கவர்ச்சி நடிப்பில் வெளிவந்த ‘சிலந்தி’ திரைப்படம் முதலுக்கு பாதகமில்லாமல் ஓடியதில் தயாரிப்பாளர் தரப்பினருக்கு சந்தோஷம். அதேசமயம் இத்திரைப்படத்தில் மோனிகாவின் கவர்ச்சி நடிப்பும் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இதனால் மோனிகா கவர்ச்சி நடிகை என்ற வலைக்குள் சிக்கினார். பின்னர் சிங்கள திரையிலும் தலைகாட்டியிருந்தார். இப்பொழுது மீண்டும் தமிழில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

முன்னணி நாளிதழின் செய்தியாளராக இருந்து சிலந்தி திரைப்படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஆதி. சிலந்தி படம் மக்கள் மத்தியில் ஓரளவு எடுபட்டதால் இயக்குநர் ஆதிக்கும் ஓரளவு பெயர்கிடைத்தது. அதனால் தனது இரண்டாவது பட வேலையினையும் தொடங்கிவிட்டார். படத்தின் பெயர் ‘நரன்’.

இத்திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள், ஒரு கதாநாயகன். அக்னீஷ்வர் என்ற நடன இயக்குநர் கதாநாயகனாக நடிக்கிறார். பூர்ணா ஒரு கதாநாயகியாக நடிக்கின்றார். மற்றுமொரு கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்த இயக்குநர் ஆதியின் வலையில் மீண்டும் சிக்கியிருப்பவர் நடிகை மோனிகா.

சிங்கமுத்து, கஞ்சாகருப்பு போன்றவர்கள் நகைச்சுவைக்காக சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். சிலந்தியில் காட்டிய கவர்ச்சிபோல் நரனிலும் மோனிகா நடிப்பாரா என்பதுபற்றி இதுவரை தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .