2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மயக்கத்தில் நயன்தாரா

A.P.Mathan   / 2010 ஜூலை 18 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் சினிமாவுக்குள் வந்த வேகத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்த நயன்தாராவுக்கு இப்பொழுது மவுசு கொஞ்சம் கம்மிதான். பல கிசுகிசுக்களில் சிக்கி திண்டாடிக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. பேரில் தாரா இருப்பதாலோ என்னமோ அவரது வாழ்க்கையும் அரக்கி அரக்கித்தான் செல்கிறது.

இச்சந்தர்ப்பத்தில்தான் அண்மையில் கிடைத்திருக்கும் வாய்ப்பு 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் கதாநாயகி அந்தஸ்து. ஆர்யாவுடன் இப்படத்தில் நடித்துவருகிறார். படப்பிடிப்பு மிகவேகமாக நடந்து வருகிறது. சாலிகிராமத்திலுள்ள பாலுமகேந்திரா படப்பிடிப்புத்தளத்தில் ஆர்யாவுடன் நடித்துக்கொண்டிருந்த நயன்தாரா திடீரென மயக்கம்போட்டு விழுந்துவிட்டார்.

இது 'என்னமாதிரியான மயக்கமோ' என படப்பிடிப்புக் குழுவினர் கலங்கிய நிலையில் அவரை பரிசோதித்த வைத்தியர் இது 'சாதாரண' மயக்கம்தான். ஓய்வில்லாமல் உழைப்பதால் ஏற்படுகின்ற மயக்கம். நன்றாக ஓய்வெடுங்கள் அதேபோல் தைரியமான சாப்பாட்டினையும் சாப்பிடுங்கள் என்று வைத்தியர் ஆலோசனை வழங்கியிருக்கிறார். அதன் பின்னர்தான் படத்தின் தயாரிப்பாளர் உட்பட படப்பிடிப்புக் குழுவினர் அப்பாடா என பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--