2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன்: நடிகை அர்ச்சனா கவி

A.P.Mathan   / 2010 ஜூலை 18 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிற மொழிப்படங்களில் பிரபல்யமானவர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துகின்ற வழமை இன்னமும் தொடர்கிறது. அந்தவகையில் அண்மைய கேரளத்து இறக்குமதி அர்ச்சனா கவி. அரவான் படத்திலேயே அவர் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

அர்ச்சனா ஏற்கனவே மலையாளத்தில் பிரபல்யமானவர். இப்பொழுது தனது 'கலைச்சேவை'யினை தமிழ் திரையுலகிற்கும் வழங்க முன்வந்திருக்கிறார். தமிழ் சினிமாவிலும் கவர்ச்சியாக நடிப்பீர்களா என்று கேட்டால் பொரிந்து தள்ளிவிடுகிறார்.

ஒரு நடிகைனு வந்துட்டா இயக்குநர் என்ன சொல்றாரோ அதைத்தான் நாம செய்யனும். இயக்குநரோட கற்பனைக்கு நாம தடையா இருக்கக்கூடாதுங்க. கதைக்கு கவர்ச்சி அவசியம்னு இயக்குநர் நினைச்சா அதை நடித்துக் கொடுக்கிறதுதான் நம்மளோட கடமைன்னு பொரிந்து தள்ளுகிறார் அர்ச்சனா.

இந்தரேஞ்சில போனா, நிச்சயமா தமிழில ஒரு ரவுன்டு வருவாருன்னுதான் தோணுது… பார்த்து அர்ச்சனா, மத்தவங்க அர்ச்சன பண்ணிட போறாங்க.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .