A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியை கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் 'நான் மகான் அல்ல' திரைப்படத்தோடு அஜித்தின் 'மங்காத்தா' திரைப்படத்தின் விளம்பர படத்தினையும் வெளியிட்டிருக்கிறார்கள். மங்காத்தா படத்தினையும் தயாநிதி அழகிரிதான் தயாரிக்கிறார். ஆகையினால் 'நான் மகான் அல்ல' படத்தினை பார்க்கப் போகின்றவர்களுக்கு அஜித்தின் 'மங்காத்தா' விளம்பரப் படம் போனஸாக வழங்கப்பட்டிருப்பதில் 'தல' ரசிகர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
இருட்டான ஓர் அறையில் அமைதியாக இருந்து கொண்டு கைத்துப்பாக்கியை தயார்செய்கிறார் அஜித். அருகில் சூடான கோப்பி கப் ஆவி பறக்கிறது. கைத்துப்பாக்கியை தயார்படுத்துகின்ற வேளையில், அந்த இருட்டறையின் பலபாகங்களிலிருந்தும் துப்பாக்கி சன்னங்கள் பறந்து சுவர்களை சல்லடை செய்கின்றன. எதையும் சட்டைசெய்யாத அஜித் தனது கைத்துப்பாக்கியை சரிபண்ணுவதிலேயே குறியாக இருக்கிறார். பின்புறத்திலிருந்து ஒரு குரல் ‘ஏய் வெளில வாடா… என்னடா விளையாடிரா…?’ என்று ஒலிக்கிறது. அதற்கு அஜித் ‘மங்காத்தாடா…’ என்று கடுப்பாக பதில் சொல்கிறார். இதுதான் அந்த விளம்பர படம்.
இந்த விளம்பரத்தினை வைத்து ஆழாளுக்கு கதை சொல்ல தொடங்கிவிட்டார்கள். மங்காத்தா ஒரு 'ரொபின்கூட் கதை' என்கிறார்கள் சிலர். என்னும் சிலர் இதுவொரு 'காங்வோர் படம்' என்கிறார்கள். ஆனால் இயக்குநர் வெங்கட்பிரபுவோ ‘ஆடிப்பாரு மங்காத்தா…’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார். பொறுத்திருந்துதான் பார்ப்போமே…
.jpg)
13 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
47 minute ago
2 hours ago