2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பிரகாஷ் ராஜ் மனைவியானார் சோனியா அகர்வால்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செல்வராகவனை மணம்முடித்திருந்த சோனியா அகர்வால், நடிப்புத்துறையிலிருந்து விலகியிருந்தார். இருவரும் விவாகரத்துப் பெற்ற பின்னர், மீண்டும் வானத்தில் பறக்கத் தொடங்கியிருக்கிறார் சோனியா அகர்வால்.

கிருஷின் இயக்கத்தில் சிம்பு - பரத் இணைந்து நடித்துவரும் படம் ‘வானம்’. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘வேதம்’ படத்தில் தமிழாக்கம்தான் ‘வானம்’. இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜின் மனைவியாக தமிழ் சினிமாவில் மீள் பிரசவம் ஆகியிருக்கிறார் சோனியா அகர்வால். மீண்டும் நடிக்க வந்த மகிழ்ச்சியில் வானத்தில் ரெக்கை கட்டி பறக்கத் தொடங்கியிருக்கும் சோனியா அகர்வால் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் பற்றிக் குறிப்பிடுகையில்…

''கிருஷ் தெலுங்கில் ‘வேதம்’ படத்தினை இயக்கியபோது அப்படத்தில் நடிப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் தந்தார். ஆனால் அன்றைய எனது குடும்ப சூழ்நிலையில் என்னால் நடிக்க முடியவில்லை. இருப்பினும் இப்போது அதன் தமிழாக்கத்தில் நடிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்'' என்று குறிப்பிட்டார்.

மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்ததையிட்டு மகிழ்ச்சியில் சோனியா அகர்வால் இருந்தாலும், பலருக்கு இவரது மீள் பிரசவம் எரிச்சலை உருவாக்கியிருக்கிறதாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--