Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வழமையாக தன்னுடைய படங்கள் திரைக்கு வந்ததும் இமயமலைக்கு செல்லும் வழக்கத்தை ரஜனிகாந்த அண்மைக்காலமாக கடைப்பிடித்து வருகிறார். அந்தவகையில் 'எந்திரன்' திரைப்படம் இந்திய திரையுலகில் பல சாதனைகளை படைத்து வருகின்றது. அந்த வெற்றி சந்தோஷத்தில் இமயமலைக்கு புறப்பட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்.
இமயமலை சென்றிருக்கும் ரஜனிகாந்த் தனது அடுத்த படம் பற்றி அங்கிருந்துதான் முடிவெடுக்க போகிறாராம். ஏற்கனவே 'சுல்தான் தி வாரியார்' அனிமேஷன் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவடையவிருக்கின்றன. அந்த படத்தினை முதலில் முடித்து வெளியிடும் திட்டமும் இருக்கிறதாம். அதனை தொடர்ந்து மற்றுமொரு புதிய படத்தினை தேர்வு செய்வதிலும் மும்முரம் காட்டுவதாக ரஜனிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இமயமலையிலிருந்து திரும்பியதும் தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை வெளியிடும் சாத்தியம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. எல்லாம் அந்த பாபாஜி மனம் வைத்தால்தான் நடைபெறும்... பொறுத்திருந்து பார்ப்பம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
35 minute ago
43 minute ago